‘சுந்தரபாண்டியன்’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து சசிகுமார், லட்சுமி மேனன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘குட்டிப் புலி’ திரைப்படம் இம்மாதம் 30ம் தேதி வெளியாகிறது.
சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ள இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது.
இப்படத்தின் மூலம் முத்தையா இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வழக்கம் போலவே மதுரைப் பின்னணி கொண்ட கதையில் சசிகுமார் நடித்துள்ளார். சென்டிமென்டாக ‘சுந்தரபாண்டியன்’ வெற்றி ஜோடி இந்த படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளது.
அதே வெற்றியை இவர்கள் மீண்டும் பெறுகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…