கார்த்தி பிறந்தநாளில் ‘பிரியாணி’ இசை ?

biriyaniவெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் 100வது படமான ‘பிரியாணி’ படத்தின் இசை, அப்படத்தின் ஹீரோவான கார்த்தி பிறந்த நாளான மே 25 அன்று வெளியாகலாம் எனத் தெரிகிறது.

கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தனது 100வது படம் என்பதால் யுவன்ஷங்கர் ராஜா இப்படத்திற்கு தனி கவனத்துடன் இசையமைத்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் இசையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. யுவனின் 100வது படம் என்பதால் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவும் வாய்ப்பு உள்ளது.

ஆனால், கார்த்தியின் அண்ணனான சூர்யா நடிக்கும் ‘சிங்கம் 2’ படத்தின் இசை வெளியீடு ஜுன் 2ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில் ‘பிரியாணி’ படத்தின் இசை வெளியீடு அதற்கு முன்னதாக நடைபெறுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

ஒரு வேளை தற்போதைய வழக்கப்படி ‘சிங்கிள் டிராக்’ வெளியீடு , ஏதாவது நடந்தாலும் நடக்கலாம்…

Read Previous

மே 30ல் ‘குட்டிப் புலி’ ரிலீஸ்…

Read Next

‘சிங்கம் 2’ இசை வெளியீட்டில் பிரம்மாண்டம்…

Most Popular