‘சிங்கம் 2’ இசை வெளியீட்டில் பிரம்மாண்டம்…

surya in singam 2சூர்யா – ஹரி இணையும் ‘சிங்கம் 2’ படத்தின் இசை வெளியீடு வரும் ஜுன் மாதம் 2ம் தேதி சென்னை, நந்தம்பாக்கம்,  வர்த்தக மைய அரங்கில் நடைபெற உள்ளது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக  தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பல கலந்து கொள்ள உள்ள நிலையில் மற்ற திரையுலகைச் சேர்ந்த  சில பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

’சிங்கம்’ படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்து பெரும் வெற்றி பெற்ற ‘நான் ஈ’ புகழ் சுதீப் , ‘சிங்கம் 2’ இசை வெளியீட்டில் கலந்து கொள்ளும் பிரபலங்களில் ஒருவர். மேலும் இதே படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்து 100 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூல் சாதனை புரிந்த படத்தில் ஹீரோவாக நடித்த அஜய் தேவகன் இந்த விழாவில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

‘சிங்கம் 2’ படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். ஹன்சிகா, அனுஷ்கா, விவேக், சந்தானம் மற்றும் பலர் நடிக்கிறார்கள். பிரின்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.

ஜுன் மாதம் 2ம் வாரம் படம் வெளியாகிறது.

Read Previous

கார்த்தி பிறந்தநாளில் ‘பிரியாணி’ இசை ?

Read Next

அமலா பாலை முந்திய கேத்தரின் திரேசா…

Most Popular