‘விஸ்வரூபம் – 2’ விரைவில் ஆரம்பம்…

viswaroopam-imageகமல்ஹசான் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் கடந்த வாரம் 100வது நாளைத் தொட்டது.

‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் அடுத்து வரும் என முதல் பாகத்திலேயே காட்டப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் பாகத்தை இந்த வாரம் தாய்லாந்து நாட்டில் கமல்ஹாசன் ஆரம்பிக்க உள்ளதாக கோடம்பாக்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் முதல் பாகத்தில் எந்த கதாபாத்திரங்களில் நடித்தார்களோ, அதே கதாபாத்திரங்களில் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள்.

முதல் பாகம் வெளியாவதற்கு பல பிரச்சனைகள் எழுந்த நிலையில் ‘விஸ்வரூபம் 2’ படத்தில் அப்படி எதுவும் பிரச்சனைகள் எழாமல் படத்தை கமல் எடுப்பார் என எதிர்பார்ப்பு உள்ளது.

Read Previous

ஐபிஎல்: இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்

Read Next

மே 30ல் ‘குட்டிப் புலி’ ரிலீஸ்…