கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார்.
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி. ஆனந்த் ஸ்ரீகாந்த் நடித்த ‘கனா கண்டேன்’ , சூர்யா நடித்த ‘அயன், மாற்றான்’ ஆகிய படங்களுக்குப் பிறகு புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.
இந்த படத்தில் நாயகனாக நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
தனுஷ் தற்போது, ‘மரியான், நய்யாண்டி’ ஆகிய தமிழ்ப் படங்களிலும், ‘ராஞ்சனா’ என்ற ஹிந்திப் படத்திலும் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பமாகிறது.