தலைப்பைப் பார்த்து நீங்க ஏதாவது தப்பா புரிஞ்சிக்கிட்டால், அதுக்கு நாங்க பொறுப்பில்லை.
ஒரு வார்த்தை ‘டைப்’ பண்ணாம விட்டால் என்னலாம் பிரச்சனை வருது. தலைப்பு என்னன்னா, ‘நீச்சல் குளத்தில் சறுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்’.
நடந்தது என்னன்னா, பிரபு தேவா இயக்கத்துல ஸ்ருதிஹாசன் ஹீரோயினா நடிக்கிற ‘ராமய்யா ஒஸ்தாவய்யா’ படத்தோட படப்பிடிப்பு ஒரு நீச்சல் குளத்துல நடந்தது. அப்ப, பிரபுதேவா கூட சீரியசா காட்சியை கேட்டுக்கிட்டிருந்த ஸ்ருதி தவறி நீச்சல் குளத்துல விழுந்துட்டாங்களாம். உடனடினயா அவரை பக்கத்துல இருக்கிற ஆஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க.
டாக்டர்ஸ் 24 மணி நேரம் ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்காங்க. ஆனால், ஸ்ருதி 24 மணி நேரத்துக்குள்ளவே ஷுட்டிங்ல வந்து கலந்துக்கிட்டாங்களாம்.
சும்மாவா, இப்ப தெலுங்குல 3 படங்கள் ஹிந்தில 2 படங்கள்னு பிஸியா நடிச்சிட்டிருக்காங்களே…அதுவும் எல்லா படமும் அடுத்தடுத்து ரிலீஸுக்கு ரெடியா இருக்கும் போது எப்படி ரெஸ்ட் எடுக்க முடியும்.
ஸ்ருதியோட இந்த சின்சியாரிட்டியை பிரபுதேவா ரொம்பவே பாராட்டினாராம்…