மிதுன், மான்ஸி நடித்துள்ள ‘மடிசார் மாமி’ படத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.
இந்த படத்தை எதிர்த்து தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
முதலில் இந்த படத்திற்கு ‘மடிசார் மாமி, மதன மாமா’ என்று தலைப்பு வைத்திருந்தனர். ஆனால் , சென்சார் போர்டு, ‘மதன மாமா’ என்பதை நீக்கி விட்டார்கள்.
படத்திற்கு ‘யுஏ’ சர்டிபிகேட்டும் வழங்கப்பட்டது.
“பாச மலர், நெஞ்சில் ஓர் ஆலயம்’ போன்ற அழகான டைட்டில்களுடன் வந்த தமிழ் சினிமா தற்போது, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா, மங்காத்தா, போக்கிரி’ என மாறிவிட்டது என்றும் நீதிபதி அவருடைய தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
நல்ல , பொருத்தமான டைட்டில் வைத்தால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும் என்றும் உயர்நீதி மன்றத் தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.