அறிமுக இயக்குனர் ஆஷிக் தயாரித்து, இயக்கியுள்ள ‘உ’ படம் தணிக்கைச் சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளுக்குப் போட்டுக் காட்டப்பட்டது.
படத்தைப் பார்த்து விட்டு , சிறந்த நகைச்சுவையுடன் அற்புதமான பொழுதுபோக்குப் படமாக உ இருக்கிறது என்கிற பாரட்டுதலுடன் படத்திற்கு ‘U’ சான்றிதழும் கொடுத்திருக்கின்றனர்.
படம் பார்த்து முடிந்த கையோடு இயக்குனரைத் தேடிய அதிகாரிகள் முன்பு ஆஷிக் சென்று நின்று போது இவ்வளவு சிறிய வயதில் இத்துனை திறமையா என்று வியந்தவர்கள் அவர் தான் தயாரிப்பாளர் என்று தெரிந்ததும் வியப்பின் உச்சத்திற்கே சென்று விட்டார்களாம்.
தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதை அடுத்து படம் வெளி யாகும் நாள் பற்றி விரைவில் தெரியப்படுத்தவுள்ளோம் என்றார் தயாரிப்பாளர், இயக்குனர் ஆஷிக்.
‘உ’ குழுவிற்கு இது ஒரு உற்சாக டானிக்…