சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ஹன்சிகாவுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதுதான் இப்போது தமிழ் சினிமாவில் பரவலான பேச்சாக உள்ளது.
‘மெரினா’ படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தாலும், ‘எதிர் நீச்சல்’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படங்களின் வெற்றி சிவகார்த்திகேயனை பெரிய ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்தி விட்டது.
அடுத்து இவர் நடிக்கும் ‘மான் கராத்தே’ படத்திற்கு சிவகார்த்திகேயனும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே சமயம், பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் ஹன்சிகா இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க முதலில் மறுத்தாராம். அதன் பின், அவருக்கு சம்பளத்தை அதிகமாக கொடுப்பதாக பேசியதும் சரி என்று சம்மதித்தாராம். முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் போது லட்சங்களில் மட்டுமே இருக்கும் சம்பளம், இப்போது ஒரு கோடியைத் தாண்டி விட்டதாம்.
இரண்டு நாட்களுக்கு முன் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இப்படித்தான் முன்னணி நடிகையாக இருக்கும் போது ஷ்ரேயா , வடிவேலுவுடன் ‘இந்திரலோகத்தில் நா. அழகப்பன்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அத்துடன் நமது கதாநாயகர்கள் அவரை ஓரம் கட்டி விட்டனர்.
பார்த்துங்க ஹன்சிகா…அட்டகாசமா வளர்ந்துட்டு வர்றீங்க…