கமல்ஹாசன் அடுத்து நடிக்கப் போகும் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கவிருக்கிறார். இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறார்கள்.
ரமேஷ் அரவிந்த், கமல்ஹாசனுடன் இணைந்து “சதி லீலாவதி, பஞ்ச தந்திரம், மும்பை எக்ஸ்பிரஸ்” போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த் இயக்கிய ‘சதி லீலாவதி’ படத்தின் ரீமேக்கான ‘ராமா பாமா சாமா’ படத்திலும் கமல்ஹாசன் நடித்திருக்கிறார்.
கமல்ஹாசன் தற்போது ‘விஸ்வரூபம் 2’ படத்தை தயாரித்து , இயக்கி, நாயகனாக நடித்து வருகிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியவுள்ளது.
இதற்கடுத்த படமாக ரமேஷ் அரவிந்த் இயக்கப் போகும் படம் தயாராகவிருக்கிறது. படத்திற்கு அநேகமாக ‘உத்தம வில்லன்’ என பெயர் வைக்கப்படலாம் எனத் தெரிகிறது. வசனங்களை கிரேஸி மோகன் எழுதப் போகிறார். முன்னணி நடிகை ஒருவர் ஹீரோயினாக நடிக்கப் போகிறார்.
யுவன்ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார்.
செப்டம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.