D Day – ஸ்ருதிஹாசனுக்கு பாராட்டு மழை…

D Day_00008‘ D Day ‘ என்ற ஹிந்திப் படத்தில் ஸ்ருதி ஹாசனின் நடிப்பைப் பார்த்து பாலிவுட் நட்சத்திரங்கள் பாராட்டித் தள்ளுகிறார்களாம்.

அர்ஜுன் ராம்பால், ரிஷி கபூர், இர்ஃபான் கான், யுமா குரேஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் பாகிஸ்தான் – கராச்சியைச் சேர்ந்த விலைமாதாக நடித்திருக்கிறாராம். (D Day – Exclusive Photo Gallery)

படத்தின் ஹீரோவைக் காதலிக்கும் கதாபாத்திரத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும், அவருடைய நடிப்பு நிறையவே பேச வைத்திருக்கிறதாம்.

சமீபத்தில் இந்த படத்தின் பிரீமியர் ஷோ மும்பையில் நடைபெற்றது. படத்தைப் பார்த்த பாலிவுட் நட்சத்திரங்கள், ஸ்ருதியின் நடிப்பைப் பார்த்து அசந்து விட்டார்களாம்.

நாளை மறுநாள் 19ம் தேதி வெள்ளியன்று இப்படம் வெளியாக இருக்கிறது.

இந்த படத்துடன் பிரபுதேவா இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக  நடித்துள்ள ‘ராமய்யா ஒஸ்தாவய்யா’ படமும் வெளியாகிறது.

இந்த வாரம் ஸ்ருதி வாரம்ம்ம்ம்ம்ம்…..

Read Previous

சிம்புவை காதலிக்கவில்லை – ஹன்சிகா

Read Next

ஷங்கரின் ‘ஐ’ 75 சதவீதம் முடிந்தது…