ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், கிருத்திகா உதயநிதி இயக்கி வரும் ‘வணக்கம் சென்னை’ படத்தின் இசை வெளியீடு வரும் 27ம் தேதி நடைபெற இருக்கிறது.
இப்படத்தின் பாடல்கள் விவரத்தை சோனி ஆடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
படத்தில் இடம் பெற்றுள்ள 7 பாடல்களில் 5 பாடல்களை அனிருத்தே பாடியிருக்கிறார்.
இதில் முக்கியமாக அனிருத் மற்றும் ஆன்ட்ரியா இணைந்து ‘எங்கடி பொறந்த….” என்ற பாடலைப் பாடியிருக்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன் அனிருத், ஆன்ட்ரியா இருவரின் முத்தக் காட்சி அடங்கிய புகைப்படம் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். அதற்கு அனிருத், ஆன்ட்ரியாவிடம் இப்போது வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இருவரும் இந்த படத்தில் இணைந்து பாடியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் சிவா, பிரியா ஆனந்த், சந்தானம் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
பாடல்கள் விவரம்…
1. ஹே….
பாடியவர்கள் – பாபோன், மரியா ரோ வின்சென்ட்
2. ஒசாகா…ஒசாகா…
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், பிரகதி
3. ஓ பெண்ணே…
பாடியவர்கள் – விஷால் தத்லானி, அனிருத் ரவிச்சந்தர்
4. எங்கடி பொறந்த…
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், ஆன்ட்ரியா ஜெர்மியா
5. ஐலசா…ஐலசா…
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், சுசித்ரா
6. ஓ பெண்ணே… (International Version)
பாடியவர்கள் – அர்ஜுன் (UK), சார்லஸ் போஸ்கோ
7. சென்னை சிட்டி…
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், ஹர்த் கவுர், ஹிப் ஹாப் தமிழன் ஆதி, கன்ட்ரி சிக்கன்
நா. முத்துக்குமார், மதன் கார்க்கி, விக்னேஷ் சிவன் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.