‘அலைபாயுதே’ படம் வெளியான போது பல பெண்களை அலைய வைக்கும் அளவிற்கு ஒரே படத்தில் புகழ் பெற்றவர் மாதவன்.
தொடர்ந்து தமிழில் நடித்து வந்தாலும், ஹிந்தியில் சில நல்ல படங்களில் நடித்து இந்திய அளவில் நடிகராக புகழ் பெற்றார் .
இப்போது மாதவன் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார்.
“Lara Croft -Tomb Raider, Con Air and Black Hawk Down” போன்ற படங்களை இயக்கிய சைமன் வெஸ்ட் அடுத்து இயக்கப் போகும் “Night Of the Livind Dead” என்ற படத்தில் மாதவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.