விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா நடிக்க ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் அருண்குமார் இயக்கி வரும் படம் ‘பண்ணையாரும் பத்மினியும்’.
இப்படத்தின் ஒரு பாடல் வெளியீடு ‘மிர்ச்சி அவார்ட்ஸ்’ விழாவில் வெளியிடப்பட்டது.
இந்த ஒரு பாடலை எழுதியவர் சமீபத்தில் மறைந்த கவிஞர் வாலி. கடைசி காலத்தில் அவர் எழுதிய பாடல்களில் இதுவும் ஒன்று. வெளியீட்டு நிகழ்வில் இந்த பாடல் ஒலித்த போது அரங்கில் அதிகமான கரவொலி எழுந்தது.
இளம் அறிமுக இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்பாடலை எஸ்.பி.பி. சரண், அனு ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.