சிறந்த படத்தையும், சிறந்த இசையையும், காலத்தில் அழிய முடியாத காவியத்தையும் படைக்க நினைக்கும் தென்னிந்திய இயக்குனர்கள் அவர்களது படங்களுக்கு இளையராஜாவைத்தான் இசையமைக்க வைப்பார்கள்.
தமிழ், தெலுங்கில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகும் ‘ராணி ருத்ரமாதேவி’ படத்திற்கு இளையராஜா லண்டனில் இசையமைத்து வருகிறார்.
குணசேகர் இயக்கி வரும் இப்படத்தில் அனுஷ்கா, ராணி ருத்ரமா தேவியாக நடிக்கிறார். ராணா டகுபதி ஹீரோவாக நடிக்கிறார். தெலுங்கு திரையுலக வரலாற்றில் இடம் பெறும் ஒரு முக்கிய படமாக இப்படம் உருவாகி வருகிறது.
பிரம்மாண்ட அரங்கங்கள், கிராஃபிக்ஸ் காட்சிகள் என படம் தயாராகி வருகிறது.