ஒரே மாதிரி கேரக்டரில் நடிக்க விருப்பமில்லை – ப்ரியாமணி

priyamani-new‘பருத்தி வீரன்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற ப்ரியாமணி, அதன் பின் தமிழில் முத்திரை பதிக்கத் தவறினாலும், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது தெலுங்கில் ‘சாண்டி’ என்ற படத்திலும் மலையாளத்தில் ‘The True Story’ என்ற படத்திலும், ஹிந்தியில் ஷாரூக் கான் நடிக்கும் ‘சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு அதிரடியான குத்துப் பாடலிலும் நடித்து வருகிறார்.

“தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. ‘சாரு லதா’ படத்திற்குப் பிறகு அதே மாதிரியான படங்களில் நடிக்க நிறைய வாய்ப்பு வந்தது. ஆனால், அவை எவற்றிலும் நான் நடிக்கவில்லை.

நான் எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்புகிறேன், கமர்ஷியல் படங்களிலும் நடிக்க விரும்புகிறேன்,” என்கிறார் ப்ரியாமணி.

Read Previous

லண்டனில் இசையமைக்கும் இளையராஜா

Read Next

தனுஷின் அடுத்த ஜோடி அமலா பால்…