தனுஷின் அடுத்த ஜோடி அமலா பால்…

dhanush-and-amala-paul‘3’ படத்திலேயே ஒன்றாக சேர்ந்து நடித்திருக்க வேண்டியது, ஏதோ ஒரு சில காரணங்களால் கடைசி நேரத்தில் அமலா பால் விலகி விட, ஸ்ருதி ஹாசன் தனுஷ் ஜோடியாக நடித்தார்.

அந்த குறை அமலா பாலுக்கு இப்போது நீங்கி விட்டது. ஆம். தனுஷின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடி அமலா பால்தான்.

“பொல்லாதவன், ஆடுகளம், 3” படங்களின் ஒளிப்பதிவாளரான ஆர்.வேல்ராஜ் இந்த படத்தை இயக்குகிறார்.

தனுஷுக்கு ஆஸ்தான இசையமைப்பாளராகி விட்ட அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்திற்கு டைட்டில் இன்னும் வைக்கவில்லை.

தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தைப் பற்றி தனுஷ் செய்தி வெளியிட்டுள்ளார். அவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான வுன்டர்பார் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.

மற்ற விவரங்கள் விரைவில்…

Read Previous

ஒரே மாதிரி கேரக்டரில் நடிக்க விருப்பமில்லை – ப்ரியாமணி

Read Next

தலைவா – தெலுங்கில் ‘அண்ணா’