காதலிக்க நேரமில்லை – ‘நேரம்’ நஸ்ரியா

nazria nazim_00018ஒரு ஹீரோவும், ஒரு ஹீரோயினும் ஒரு படத்துல சேர்ந்து நடிச்சால், உடனே அவங்களுக்குள்ள காதல்னு பரப்புறதே சிலருக்கு வேலையா இருக்கு.

அது நேத்து வந்த ஹீரோயினுக்கும் நடக்கிறதுதான் கொடுமை. ‘நேரம்’னு ஒரு படம்தான் நஸ்ரியா நடிச்சி வெளிவந்திருக்கு.

அடுத்ததா ‘நய்யாண்டி, ராஜா ராணி,திருமணம் என்னும் நிக்காஹ்’ படங்கள் வர்ற இருக்கு.

இதுல ‘திருமணம் என்னும் நிக்கா’ படத்துல நஸ்ரியா கூட ஜோடியா நடிக்கிறவரு ஜெய். இவங்க இரண்டு பேருக்கும் காதல்னு சமீபமா சில மீடியாக்கள்ல செய்தி வந்தது. இதைப் பத்தி கேள்விப்பட்டு ரொம்பவே கோபமா இருக்காங்க நஸ்ரியா.

இதைப் பத்தி அவங்க சொல்லும் போது,

“இதெல்லாம் எந்த அடிப்படை ஆதாரமில்லாம வெளி வர்ற கிசுகிசுக்கள். எங்க இருந்துதான் இப்படி செய்தி கிளம்புதோ தெரியலை. நடிக்கிறதுக்கே நேரமில்லாம தவிச்சிக்கிட்டிருக்கும் போது, காதலிக்கிறதுக்குலாம் எனக்கு நேரமில்லை”, என்றார்.

‘நேரம்’ படத்து நாயகிக்கு ‘நேரம்’ இல்லைங்கறது….எவ்வளவு பெரிய ஒற்றுமை…..

Read Previous

கல்யாண கோலத்தில் த்ரிஷா ?

Read Next

அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய அனிருத்…