இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ‘நான்’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார்.
இவர் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படம் ‘சலீம்’. இப்படத்தை நிர்மல் குமார் இயக்குகிறார். விஜய் ஆண்டனி ஜோடியாக அக்ஷா பர்தசானி நடிக்கிறார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது. இப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.
மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.