செல்வராகவன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் ‘இரண்டாம் உலகம்’ படத்தின் இசை வெளியிடு நாளை மறுநாள் 4ம் தேதியன்று நடைபெற உள்ளது.
அதற்கு முன்னதாக இன்று ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், தனுஷ் முதன் முதலாக பாடிய பாடல் இன்று வெளியிடப்பட்டது.
செல்வராகவன் இயக்கிய ‘புதுப்பேட்டை’ படத்திலேயே தனுஷ் பாடியிருந்தாலும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் இடம் பெற்ற ‘உம் மேல ஆசைதான்…’ பாடல்தான் அவரை ஒரு பாடகராகவும் அறிய வைத்தது. ‘ஒய் திஸ் கொலவெறி’ ஹிட்டுக்குப் பிறகு முழு நேர பாடகர் ஆகி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மரியான் படத்தில் கூட ஏ.ஆர். ரகுமான் இசையில் ஒரு பாடலைப் பாடியிருந்தார் தனுஷ்.
இப்போது மீண்டும் அண்ணன் இயக்கத்தில் தனுஷ் ‘இரண்டாம் உலகம்’ படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
இன்று காலை சூரியன் எஃப்.எம் வானொலியின் நேரடி ஒலிபரப்பில் இப் பாடலை ஆர்யா வெளியிட்டார்.