சன்னி லியோன்…இந்த பெயரைத் தெரியாத சினிமா ரசிகர்கள் இருக்க முடியாது.
இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கனடா நடிகையான இவர் ஹிந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்து அதிகமான புகழைப் பெற்றவர்.
‘ஜிஸ்ம் 2’ ஹிந்திப் படத்தின் மூலம் இந்தியத் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இப்போது ‘ராகினி எம்எம்எஸ் 2’ என்ற இந்திப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். பாலிவுட் நடிகையாகவே நடிக்கும் இந்த படத்திற்காக இவருக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பளவம் வழங்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இருந்தாலும், இப்படத்தில் இடம் பெறும் ஒரு 5 நிமிட காட்சியில் நடிப்பதற்காக 15 லட்ச ரூபாய் கேட்டிருக்கிறாராம். தயாரிப்பாளர்களும் அந்த பணத்தைக் கொடுக்க முடிவெடுத்திருக்கிறார்கள்.
அப்படி என்ன ‘சிறப்பான’ காட்சி அது என்பது படம் வந்தால்தான் தெரியும்.