சுந்தர் .சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள ‘மத கஜ ராஜா’ (MGR) திரைப்படம் அடுத்த மாதம் செப்டம்பர் 9ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக உள்ளது.
இப்படம் முடிந்து பல மாதங்களாகியும் சில பல பிரச்சனைகளால் வெளிவருவது தள்ளிக் கொண்டே போனது.
சுந்தர் .சி இயக்கி வெளிவந்த ‘தீயா வேலை செய்யணுகும் குமாரு’ படம் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளதால் இப்படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
விஷால், அஞ்சலி, வரலட்சுமி முதல் முறையாக இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் கலந்த படமாக இப்படம் உருவாகியுள்ளது.
பிரகாஷ்ராஜ், நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ், சரத் சக்சேனா, காயத்ரி, விடிவி கணேஷ், சத்யகிருஷ்ணா, சுஜி பாலா மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
விஷாலுக்கு இந்த MGR-ஆவது வெற்றியைத் தேடிக் கொடுப்பாரா ?