ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் விக்ரம், எமி ஜாக்சன், சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் ‘ஐ’ படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிந்துள்ளது.
இப்போது இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பு இன்னும் 30 நாளைக்கு நடைபெற இருக்கிறது.
இப்படத்திற்காக விக்ரம் மிகவும் கடுமையாக உழைத்து வருகிறார். உடம்பை இளைக்க வைத்தும், பின்னர் முறுக்கேற வைத்தும் என அவரை அடிக்கடி வருத்திக் கொண்டு உழைத்து வருகிறார்.
இப்படம் நிச்சயம் தமிழ் சினிமாவில் மேலும் ஒரு மைல் கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
