‘தலைவா’ அரசியல் படமல்ல – விஜய்

thalaiva location_00012பேருதான் ‘தலைவா’, ஆனால் அரசியல் படமல்ல என சொல்கிறார் விஜய்.

இது சம்பந்தமாக விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“தலைவா’ படம் குடும்பத்தோடும், குழந்தைகளோடும் எல்லோரும் ரசிக்க கூடிய ஜனரஞ்சகமான படம். இந்த படத்தில் ‘காதல்’ ஆக்ஷன், காமெடி போன்ற அனைத்து அம்சங்களும் உள்ளன. இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் அல்ல.

யாரோ சிலர் இது அரசியல் படம் என்று வதந்திகள் பரப்பி வருகிறார்கள். யாரும் இதை நம்ப வேண்டாம். துளி கூட அரசியல் இல்லாத ஒரு சமூக படம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று விஜய் கூறியுள்ளார்.

எத்தனை தமிழ்ப்படம் தலைப்புக்கும், கதைக்கும் சம்பந்தம் இல்லாம இருக்கு…அப்படி நினைச்சுக்குங்க..இந்த படத்தையும்…

Read Previous

அஜித்தின் ‘ஆரம்பம்’ – ஒரு பின்னணித் தகவல்…

Read Next

‘தலைவா’ – வெளியாவதில் சிக்கல்…