ஜீவா – நஸ்ரியா நடிக்கும் ‘நீ நல்லா வருவடா…’

jeeva-and-nazriaஜீவா – நஸ்ரியா முதல் முறையாக இணைந்து நடிக்கப் போகும்  புதிய திரைப்படம் ‘நீ நல்லா வருவடா…’.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் மூலம் சந்திரமோகன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் பிரபல தெலுங்குப் பட இயக்குனர் கருணாகரனிடம் உதவியாளராக பணி புரிந்தவர்.

ஜீவா தற்போது ‘என்றென்றும் புன்னகை, யான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நஸ்ரியா, ‘ராஜா ராணி’, ‘நய்யாண்டி’, ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

“இந்த படம் ஒரு ஜாலியான படம். ‘சிவா மனசுல சக்தி’ படம் போல கலகலப்பாக இருக்கும். படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது, ” என ஜீவா தெரிவித்துள்ளார்.

படத்துல சந்தானம் இருக்காருங்களா….?

Read Previous

‘வேலையில்லா பட்டதாரி’ இன்று ஆரம்பம்…

Read Next

இனி…பாடுபவர்களுக்கும் ராயல்டி…