விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி வெளிவர இருக்கும் படம் ‘மத கஜ ராஜா’.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த வாரம் நடைபெற்ற போது படத்தின் இயக்குனர் சுந்தர் .சி, விஷால், வரலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
படத்தின் மற்றொரு ஹீரோயினான அஞ்சலி கலந்து கொள்ளவில்லை. ஆனால் , திடீரென அஞ்சலி வந்து விட்டார் என புகைப்படக் கலைஞர்கள் அனைவரும் வெளியே ஓடினர்.
அவர்கள் சென்றதற்கான காரணம் தெரிந்ததும், சுந்தர் .சியும் விஷாலும் சிரித்துக் கொண்டனர். ஏனென்றால், அவர்கள் தேடியே அஞ்சலி கிடைக்கவில்லை என முணுமுணுத்துக் கொண்டார்களாம்.
இதனிடையே ஒரு பத்திரிகை பேட்டியிலும் விஷால், “தெலுங்கிலும் இப்படத்தை வெளியிட இருப்பதால், அஞ்சலியையே சொந்தக் குரலில் பேச வைக்க எவ்வளவோ முயற்சித்தோம். ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை,” என்று கூறியிருக்கிறார்.
இந்த வார முக்கிய பத்திரிகைகளில் அஞ்சலி விவகாரமே வந்திருப்பதால் இன்னும் சில நாட்களுக்கு மீண்டும் அஞ்சலி பற்றிய செய்திகள் அதிகமாக வர வாய்ப்பிருக்கிறது.