கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி நடிக்க யுவன் ஷங்கர் ராஜாவின் 100வது பட இசையமைப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘பிரியாணி’ படத்தின் வெளியீடு ஏறக்குறைய நான்கு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இப்படம் பொங்கலுக்குத்தான் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆனால், அதற்கு முன் கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம் நடிப்பில் தமன் இசையைமப்பில் ராஜேஷ் இயக்கி வரும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ திரைப்படம் தீபாளிக்குத் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ‘பிரியாணி’ படத்தின் இசை முறையாக வெளிவருவதற்கு முன்னாலேயே இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியானது. இதன் பின் உடனேயே ‘பிரியாணி’ படத்தின் இசையை எந்த விதமான விழாவையும் நடத்தாமல் வெளியிட்டார்கள்.
யுவன் இசையமைக்கும் 100வது படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அப்படி ஒரு விழா நடக்காமலே போனது.
இப்போது, படத்தின் வெளியீடும் நிறைய நாட்கள் தள்ளிப் போவதால் படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு ரசிகர்களும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள்….