யோகா ஆசிரியையாக இருந்து திரையுலகில் கதாநாயகியாக திடீரென அறிமுகமானவர் அனுஷ்கா.
நல்ல உயரம், அழகான தோற்றம், திறமையான நடிப்பு இவற்றால் சீக்கிரமே தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக மாறினார்.
ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம் என்கிறார் அனுஷ்கா.
அவர் மேலும் கூறுகையில், “சினிமாவில் அறிமுகமான நேரத்தில் என்னைப் பற்றியே நான் கவலைப்பட்டதுண்டு. எதிர்பாராமல் திரையுலகத்தில் நுழைந்து அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் கிடைத்ததால் நிறையவே மாற்றம் ஏற்பட்டது.
என் மீது அளவுக்கதிகமான பாசம் வைத்திருக்கும் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் , அதை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்பது மட்டுமே எனது ஆசை,” என்கிறார் அனுஷ்கா.