சூர்யாவுக்கு கதை ரெடி – கௌதம்

duruva natchathiram newsகௌதம் இயக்க சூர்யா நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படம் பூஜை போடப்பட்டு அதன் பின் அப்படியே நின்று விட்டது.

சூர்யாவுக்கு , கௌதம் சொன்ன கதை பிடிக்கவில்லை என்றும், அதனால்தான் மேற்கொண்டு படப்பிடிப்பு நடக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் படத்தின் கதையை மாற்றி அமைத்து விட்டதாக கௌதம் தெரிவித்துள்ளார்.

அவருடைய சமூக வலைத்தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள கௌதம், “சூர்யாவுக்கான கதை மாற்றி அமைக்கப்பட்டு விட்டது. சீக்கிரமே படத்தை ஆரம்பிப்போம். நிறைய எழுதி, நிறைய கதையை வைத்திருக்கிறேன். இனி நல்ல நேரம்தான், ” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆக, ‘துருவ நட்சத்திரம்’ சீக்கிரமே ஒளி வீசப் போகிறது.

Read Previous

ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் – அனுஷ்கா

Read Next

தெலுங்கிலும் பாடினார் கார்த்தி…