‘16 வயதினிலே’ வருகிறது…

16-vayathinileyவெற்றிகரமாக ஓடிய பழைய படங்களை தூசி தட்டி எடுத்து, அவற்றை டிஜிட்டலுக்கும், டிடிஎஸ்ஸுக்கும், சினிமாஸ்கோப்புக்கும் மாற்றி இன்றைய தலைமுறை ரசிகர்களை கவரும் விதத்தில் வெளியிடுவது தொடர்கிறது.

‘கர்ணன்’, ‘பாசமலர்’, இன்று வெளியாகும் ‘நினைத்தாலே இனிக்கும்’ படங்களைத் தொடர்ந்து ‘16 வயதினிலே’ படமும் விரைவில் வெளிவர இருக்கிறது.

பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்து 1977ம் ஆண்டு வெளிவந்த ‘16 வயதினிலே’ திரைப்படம் அந்த படத்தில் நடித்த அனைவருக்குமே நல்ல திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது.

‘இது எப்படி இருக்கு’ என்று ரஜினிகாந்த் பேசிய வசனம் அந்த கால கட்டங்களில் மிகவும் பிரபலமான ஒன்று. எந்த தமிழ் ஹீரோவும் நடிக்கத் தயங்கும் ‘கோமணம்’ கட்டிய தோற்றத்தில் அழகான ஹீரோவான கமல்ஹாசன் நடித்து நடிப்பின் மீது அவருக்கிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினார். ஸ்ரீதேவியின் அழகான தோற்றம் இளைஞர்களை கிறங்க வைத்த ஒன்று.

இளையராஜாவின் இசையில் ‘செந்தூரப்பூவே…’ பாடல் இன்றும் பல இசைத் தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இப்படி பல சிறப்புக்களைப் பெற்ற ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் புதிய டிரைலரை இயக்குனர் பாரதிராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் வரும் வெள்ளியன்று வெளியிடுகிறார்கள்.

‘16 வயதினிலே’ புத்தம் புதிய வடிவில் மீண்டும் ஒரு பரவசத்தை ஏற்படுத்த வருகிறது…

Read Previous

அட்லி சொன்ன ‘அட்டகாசமான கதை’

Read Next

நான் ரசித்த ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ – இயக்குனர் சேரன் வீடியோ