‘ஜன்னல் ஓரம்’ – பேருந்து நிலையங்களில் இசை வெளியீடு…

jannal ooram_00033கரு.பழனியப்பன் இயக்கத்தில், வித்யாசாகர் இசையமைப்பில்,  தயாராகியுள்ள ‘ஜன்னல் ஓரம்’ படத்தின் இசை வெளியீடு, நாளை (17-10-2013) சென்னை மாநகரமெங்கும் நடத்தப்பட உள்ளது.

இப்படத்தில் பார்த்திபன், விமல் இருவரும் ஓட்டுனராகவும், நடத்துனராகவும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் மற்ற நட்சத்திரங்களான விதார்த், மனிஷா, பூர்ணா, ரமணா, சிங்கம்புலி, ராஜேஷ் மற்ற நட்சத்திரங்களுடன் ஒரு சிறப்பு மாநகரப் பேருந்தில் சென்னையை வலம் வந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கரு.பழனியப்பன், வித்யாசகர் மற்ற தொழில்நுட்பக்கலைஞர்களுடன் ஒரு பேருந்து காலை 8.00 மணிக்கு சென்னை, வட பழனி பேருந்து நிலையத்திலிருந்து கொண்டாட்டத்துடன் தன் ஜன்னல் ஓரப் பயணத்தை துவக்குகிறது.

தொடர்ந்து கிண்டி, குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் முன்னிலையில் ‘ஜன்னல் ஓரம்’ படப் பாடல்கள் வெளியிடப்படும்.

கடைசியாக மாலை 6.00 மணிக்கு சென்னை, கமலா திரையரங்கத்தில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில், திரையுலகப் பிரபலங்கள் முன்னிலையில் நடிகர் சூர்யா படத்தின் டிரைலரையும், பாடல் காட்சிகளையும் வெளியிடுகிறார்.

நடிகர்கள் படத்தின் விளம்பரத்திற்கு ஒத்துழைப்பதில்லை என்ற தயாரிப்பாளர்களின் குற்றச்சாட்டுக்கு மத்தியில் ‘ஜன்னல் ஓரம்’ படத்தின் நட்சத்திரங்கள் பாராட்டுக்குரியவர்கள்.

 

Read Previous

தீபாவளிக்கு ‘ஆரம்பம்’ ரிலீஸ் ‘கன்ஃபர்ம்’…

Read Next

அஜித்தின் கடமை உணர்ச்சி – எழுத்தாளர்கள் சுபா…