செல்வராகவன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் இசையமைப்பில் ஆர்யா, அனுஷ்கா மற்றும் பலர் நடிக்கும் ‘இரண்டாம் உலகம்’ படம் ஒரு ‘ஃபேன்டஸி’ ஆன கதை கொண்ட படமாம்.
நாம் இருப்பது ஒரு உலகம், நம்மைப் போன்றே நம்மால் கண்டு பிடிக்க முடியாத பல உலகங்கள் இந்த அண்டத்தில் உள்ளன. அப்படி உள்ள மற்றொரு உலகத்தில் இருப்பவர்களைப் பற்றிய படமாகத்தான் இப்படம் உருவாகியுள்ளது.
அதாவது , ‘அவதார்’ படத்தில் வரும் ‘பன்டோரா’ உலகம் போல.
பூமியில் உள்ள ஆர்யா, அனுஷ்கா போன்றே இரண்டாம் உலகத்திலும் வேறொரு ஆர்யா, அனுஷ்கா உள்ளார்கள். ஆக இப்படி இரண்டு உலகத்திலும் இருப்பவர்களைப் பற்றிய படம்தான் ‘இரண்டாம் உலகம்’.
படத்தில் எக்கச்சக்கமான கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கிறது. அனிருத் இசையில் மூன்று பாடல்கள் படத்திற்காக புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.
நிச்சயம் தமிழ் சினிமா உலகம் ஆச்சரியப்படும் விதத்தில் இப்படம் இருக்கலாம் என்கிறார்கள்.