சென்னை தி.நகர் வடக்கு போக் சாலையில், ‘ரெஸிடன்ஸி டவர்’ நட்சத்திர ஹோட்டலுக்குப் பின்புறம், ‘டான் ஸ்டுடியோ’ எனும் பெயரில் புதிதாக ஒரு எடிட்டிங், டப்பிங் மற்றும் ரெக்கார்டிங் தியேட்டர் திறக்கப்பட்டுள்ளது.
‘ஆர்.ஜி.பி’ (RGB) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பிரைமரி வர்ணங்களை எண்ணத்தில் கொண்டு ரெட் சூட், கிரீன் சூட், ப்ளூ சூட் என மூன்று பிரதான வண்ணங்களில் அழகு மிளிரும் இந்த ’டான் ஸ்டுடியோவுக்குள் மூன்று பிரம்மாண்ட எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டர்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது..
‘டான் ஸ்டுடியோ’வின் உள் அமைந்த இந்த மூன்று எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டரில் ஒன்றான ‘ஹெச்.டி- 3டி’ புரொஜக்ஷன் வசதியுடைய ‘ரெட் சூட்’ டப்பிங் – ரெக்கார்டிங் தியேட்டரை பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி திறந்துவைத்தார்.
‘கிரீன் சூட்’ எடிட்டிங் ஸ்டுடியோவை நடிகர் விஜய் சேதுபதி துவக்கி வைத்தார். ‘ப்ளூ சூட்’ எடிட்டிங் தியேட்டரை ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’ படங்களின் இயக்குனர் ராம் ஆரம்பித்து வைத்தார்.
‘டான் ஸ்டுடியோ’ எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டர்களின் பிரமாண்டமான வசதிகளைக் கண்டு இந்த மூன்று சினிமாக்கலைஞர்களும் வியந்து, பாராட்டினார்கள் என்பது ஸ்டுடியோவுக்குக் கிடைத்த பெருமை.
இனி, எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் டெக்னிக்கல் புதுமைகளை விரும்பும் தமிழ் சினிமா இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ‘டான் ஸ்டுடியோ’ வாயிற்கதவைத் தட்டுவது நிச்சயம் என்று நம்புவோம்!