சர்வதேச அளவில் புகழ் பெற்ற ‘ஹிப் ஹாப்’ இயக்கம் ‘ரெமி மார்ட்டின் ஹிப் ஹாப்’, தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘ஹிப் ஹாப்’ கலைஞர் ‘ஹிப் ஹாப் தமிழன் ஆதி’-யுடன் இரண்டாவது முறையாக இணையப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
Jay Z, Robin Thicke, Usher போன்ற சர்வதேச ‘ஹிப் ஹாப்’ ஜாம்பவான்களுடன் இதற்கு முன் இவர்கள் இணைந்திருந்தாலும்’யுடன் இவர்களுடன் இணையும் முதல் ஆசிய மற்றும் இந்திய இசைக்கலைஞர் ‘ஹிப் ஹாப் தமிழன் ஆதி’ என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2012ம் ஆண்டு இவர்கள் முதன் முதலாக வெளியிட்ட ‘ஹிப் ஹாப் தமிழன்’ என்ற ஆல்பம், உலகப் புகழ் பெற்றது மட்டுமல்லாமல், ‘இந்தியாவின் முதல் தமிழ் ஹிப் ஹாப்’ ஆல்பம்’ என்று இந்திய புக் ஆப் ரெக்கார்ட்ஸால் அங்கீகரிக்கப்பட்டது.
அந்த ஆல்பத்தின் முதல் பாடலான ‘கிளப்புல மப்புல’ முதல் இரண்டு நாட்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களை அள்ளியது மட்டுமல்லாமல் ‘Internet Sensation of the Year’ என்ற விருதை ஆதிக்கு வாங்கித் தந்தது.
இசையமைப்பாளர் அனிருத் இசையில் இவர் ராப் செய்த ‘எதிர் நீச்சல்’ படத்தில் இடம் பெற்ற ‘எதிர் நீச்சலடி…’, ‘வணக்கம் சென்னை’ படத்தில் இடம் பெற்ற ‘சென்னை சிட்டி காங்ஸ்டர்’ ஆகிய இரண்டு பாடல்களும் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது.
ஹாலிவுட் படமான ‘Smurfs 2’ –வில் ‘நா நா நா’ என்ற பாடலுக்கு இசையமைத்ததன் மூலம் ஹாலிவுட் திரைப்படத்திற்கு இசையமைத்த முதல் தமிழ் ராப் பாடகர் என்ற பெயரையும் பெற்றார்.
இந்த வெற்றிகளைத் தொடர்ந்து ‘ரெமி மார்ட்டின் ஹிப் ஹாப்’ நிறுவனம் இவருடன் சர்வதேச ஹிப் ஹாப் கலைஞர்களைக் கொண்டு ஒரு ஆல்பம் தயாரிக்க உள்ளது. இந்த ஆல்பத்திற்கு ‘இன்டர்நேஷனல் தமிழன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஆல்பம் 2014 ஆகஸ்ட் 15ம் தேதியன்று வெளியாக உள்ளது.