ஃபேஸ்புக், ட்விட்டர் என இரண்டு சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களை ரசிகர்களுடன் இணைத்துக் கொள்ளும் நட்சத்திரங்களின் வரிசையில் வடிவேலுவும் வந்து விட்டார்.
நடிகர் வடிவேலு நேற்று இரவு தனது ட்விட்டர் கணக்கை ஆரம்பித்தார். ஆரம்பித்த சில மணி நேரங்களுக்குள் அவருடைய ட்விட்டர் கணக்கை ஆயிரம் பேர் தொடர ஆரம்பித்து விட்டனர்.
“வந்துட்டேன்யா வந்துட்டேன்…” என தனது முதல் பதிவாக ட்விட்டரில் ட்வீட் செய்தார் வடிவேலு. தொடர்ந்து “என்னய்யா இது இவ்வளவு வேகமா பரவுது” எனவும் ட்வீட் செய்தார்.
வடிவேலுவின் ட்விட்டர் முகவரி – @Actor_Vadivelu
வடிவேலுவின் ரசிகர்களுக்கு இனி கொண்டாட்டம்தான்…அவரது நகைச்சுவை வசனங்களை இனி ட்விட்டரிலும் தொடரலாம்.
பல தமிழ் ஹீரோக்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கம் வர மறுக்கும் நிலையில் நகைச்சுவை ஹீரோவான வடிவேலு ட்விட்டர் பக்கம் வருவதை அட்டகாசமாக வரவேற்கிறோம்.
இது குறித்து வடிவேலு ஒரு சிறு வீடியோ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்…