அஜித்துடன் ‘ஊர் சுற்றிய’ ஹீரோ…

ajith-and-vidarthஅஜித்துடன் நடிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவரைப் பற்றி பெருமையாக பேச ஆரம்பித்து விடுவார்கள். அந்த அளவிற்கு அவர்கள் மீது அன்பு செலுத்துவார் அஜித் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

‘வீரம்’ படத்தில் அஜித்தின் தம்பியாக நடிப்பவர் ‘மைனா’ விதார்த்.

அஜித்துடன் நன்றாக ‘ஊரைச் சுற்றி’ இருக்கிறார். விசாகப்பட்டினத்திலிருந்து ஒடிசா  வரை பைக்கில் அஜித்துடன் சுற்றியது மட்டுமில்லாமல், அஜித்தின் ஏற்பாட்டால் சுவிட்சர்லாந்து வரை சென்று வந்திருக்கிறார்.

அதைப் பற்றி விதார்த் மிகவும் நெகிழ்ச்சியாக குறிப்பிடுகிறார்

‘வீரம்’ படத்தின் படப்பிடிப்புக்காக அஜித் மற்றும் சிலர் சுவிட்சர்லாந்து செல்ல முடிவானது. திடீரென என்னிடம் அஜித் சார், சுவிட்சர்லாந்து போயிருக்கீங்களா எனக் கேட்டார். நான் இல்லையென சொன்னேன். உடனே தயாரிப்பாளரிடம் சொல்லி எனக்கும் விசா போடச்சொன்னார்.

அதன் பின் ஒரே நாளில் எனக்கும் விசா தயார் செய்து சுவிட்சர்லாந்து கூப்பிட்டுப் போனர். அவருக்குத்தான் அங்கு படப்பிடிப்பு. ஆனால், என்னையும் அழைத்துக் கொண்டு ஊர் உலகம் சுத்தினார்.

அது மட்டுமல்ல, விசாகப்பட்டினத்திலிருந்து ஒடிசா வரை பைக்கை வர் ஓட்ட பின்னாடி நான் உட்கார்ந்து சென்றேன். அவருக்கு என்ன ஜாக்கெட், ஹெல்மெட் வாங்கினாரோ, அதையேதான் எனக்கும் வாங்கினார்.

அவர் தம்பியாக நான் நடிக்க வேண்டும் என்பதற்காக , வேறு ஒரு படத்தின் கால்ஷீட்டை அந்த இயக்குனரிடம் பேசி அவரே வாங்கினார். அவரை  மாதிரி ஒருவரைப் பார்ப்பது அரிது, ” என மனம் திறந்து சொல்கிறார் விதார்த்.

Read Previous

ஏமாத்தினாங்க…அதான் படம் ஓடலை…‘நய்யாண்டி’ பற்றி நஸ்ரியா…

Read Next

‘கோச்சடையான்’ தாமதம், களத்தில் இறங்கிய ரஜினி…