‘கோச்சடையான்’ தாமதம், களத்தில் இறங்கிய ரஜினி…

kochadaiyan-stillமழை கூட அதோ , இதோ என கொஞ்சம் தள்ளித் தள்ளி வந்தாலும் வந்து விடுகிறது.

ஆனால், ‘கோச்சடையான்’ வெளியீடு  எப்போது என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

இனியும், படம் தாமதமாகக் கூடாது என நினைத்த ரஜினிகாந்த், நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எப்படியும் ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட்டே தீர வேண்டும் என ரஜினி முடிவெடுத்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

மகளும், இயக்குனருமான செளந்தர்யாவிடம் முழு பொறுப்பையும் ரஜினி ஒப்படைத்துவிட்டாலும், தற்போது படம் தாமதமாகி வருவதால் ரஜினியே நேரடியாக தலையிட ஆரம்பித்துவிட்டாராம். அவர் வேலை செய்யும் சுறுசுறுப்பைக் கண்டு அனைவரும ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனராம்.

அதனால், படம் கண்டிப்பாக ஏப்ரல் மாதம் வருவது நிச்சயம் என்கிறார்கள்…

Read Previous

அஜித்துடன் ‘ஊர் சுற்றிய’ ஹீரோ…

Read Next

100 கோடி படங்களின் நாயகி…