தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் மகேஷ் பாபு. தற்போது ‘1 நேநொக்கடைன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டிற்காக ஹைதராபாத் முழுவதும் பிரம்மாண்டமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
அந்த போஸ்டர்களில் பீச்சில் மகேஷ்பாபு நடந்து செல்ல, அவரது காலடித் தடத்தில் படத்தின் ஹீரோயினான கிருத்தி சானான் ஊர்ந்து செல்வது போலவும் கொண்ட புகைப்படம் பெரிய அளவில் இடம் பெற்றுள்ளது.
இதற்கு ஆந்திராவில் உள்ள பெண் அமைப்புகள் பலத்த எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
நடிகை சமந்தாவும் அவரது ட்விட்டரில் இப்படத்தின் பெயரைக் குறிப்பிடாமல், பெண்களுக்கு எதிரான பிற்போக்குத்தனமான விளம்பரம் என குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து மகேஷ் பாபுவின் ரசிகர்கள் சமந்தாவிற்கு எதிராக ட்விட்டரில் செய்தி வெளியிட ஆரம்பித்தனர்.
நேற்று காலை சமந்தாவிற்கு ஆதராவாக நடிகர் சித்தார்த், “ஒருவரின் கருத்துரிமைக்கு எதிராக செயல்படுபவர்கள் தீவிரவாதி போல…’ என்ற விதத்தில் கமென்ட் போட்டார்.
இதைக் கண்டு கொதித்துப் போன மகேஷ் பாபு ரசிகர்கள் ட்விட்டரில் #GetLostSamanthaAndSiddharth என்ற ஹேஷ் டேக்கில் அவர்களது கமென்ட்களை போட ஆரம்பித்தனர்.
சமந்தாவின் ரசிகர்கள் #WeLoveSamantha என பதிலுக்கு போட ஆரம்பிக்க பெரிய பரபரப்பு ஏற்பட ஆரம்பித்து விட்டது.
எந்த விஷயத்திலும் மற்றவர்களைப் போல் அல்லாமல் கருத்துக்களை தைரியமாக சொல்லக் கூடியவர் சமந்தா. நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகளைப் பற்றிக் கூட அவரது கருத்தை வெளியிட்டார். அது கூட பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் சித்தார்த், சமந்தாவிற்கு எதிராக இப்படி ஒரு பிரச்சனை வெடித்துள்ளது ஆந்திரத் திரையுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.