மீண்டும் உதயநிதி, நயன்தாரா ஜோடி சேரும் ‘நண்பேன்டா’

udhayanidhi stalin nayantharaஉதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடித்துள்ள ‘இது கதிர்வேலன் காதல்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

இந்த நட்சத்திரக் கூட்டணி மீண்டும் ‘நண்பேன்டா’ என்ற படத்தில் இணைகிறது.

இயக்குனர் ராஜேஷ் .எம்  உதவியாளரான ஜெகதீஷ் இயக்கப் போகும் இந்த படத்தின் பணிகள் நாளை முதல் ஆரம்பமாகின்றன.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். நா. முத்துக்குமார் பாடல்களை எழுதுகிறார்.

காதல், நட்பு இவற்றை மையமாக வைத்து அனைவரும் ரசிக்கும்படியான படமாக இப்படத்தை உருவாக்க இருக்கிறார்கள்.

‘இது கதிர்வேலன் காதல்’ படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கலாம் என தகவல் வெளியானது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானம் தொடர்ந்து உதயநிதி ஹீரோவாக நடிக்கும் மூன்றாவது படத்திலும் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற விவரங்கள் விரைவில்…

Read Previous

மீண்டும் இளையராஜாவிடம் வருகிறாரா பாலா ?

Read Next

‘இல்ல ஆனாலும் இருக்கு’ பெயர் மாறியது…