‘இல்ல ஆனாலும் இருக்கு’ பெயர் மாறியது…

yaamirukka-bayamaeyஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் தயாரித்து வரும் ‘இல்ல ஆனாலும் இருக்கு’ படத்தின் பெயர் ‘யாமிருக்கே பயமே’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இயக்குனர் கே.வி.ஆனந்திடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய டீகே இயக்கும் இந்த படத்தில் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஆதவ் கண்ணதாசன், ஓவியா, கருணா மற்றும் பலர் நடிக்கிறார்கள். பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கெனவே, ‘இருக்கு ஆனா இல்ல’ என்ற பெயரில் மற்றொரு படமும் தயாராகி வருவதால், தேவையற்ற பெயர்க் குழப்பம் ஏற்படக் கூடாதென ‘இல்ல ஆனாலும் இருக்கு’ படத்தின் பெயரை ‘யாமிருக்க பயமே’ என மாற்றியதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படத்தின் முழு படப்பிடிப்பும் மலைவாசஸ்தலமான நைனிடாலில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரியில் இசை வெளியீடு நடக்க உள்ளது.

Read Previous

மீண்டும் உதயநிதி, நயன்தாரா ஜோடி சேரும் ‘நண்பேன்டா’

Read Next

இன்றைய ரிலீஸ் – 3 படங்கள்