தெலுங்குக்குப் போகும் ‘ஜில்லா’…

jilla-2514விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்து பொங்கலன்று திரைக்கு வந்த ‘ஜில்லா’ திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் வியாபார ரீதியாக நல்ல வசூலை கொடுத்து வருகிறது என்கிறார்கள்.

மோகன்லால் நடித்தால் மலையாளத்தில் அப்படியே தமிழ்ப் படமாகவே ரிலீஸ் செய்து வசூலைப் பார்த்து விட்டார்கள்.

அதனால், மற்ற மொழிகளில் படத்தை ரீமேக் முடிவு செய்து, முதலில் தெலுங்கில் ரீமேக் செய்யும் திட்டத்தை ஆரம்பித்து விட்டார்களாம்.

தமிழில் இயக்கிய நேசன், தெலுங்கிலும் படத்தை இயக்கலாம் எனத் தெரிகிறது.

தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்களான மகேஷ் பாபு, ராம் சரண், ஜுனியர் என்டிஆர் ஆகியோரில் ஒருவர் விஜய் கதாபாத்திரத்திலும் தெலுங்கின் முன்னணி சீனியர் நடிகர் ஒருவர் மோகன்லால் கதாபாத்திரத்திலும் நடிக்க வாய்ப்புள்ளதாம்.

எப்படியோ தயாரிப்பாளர் மனசு ‘ஜில்லுனு’ ஆனால் சரி…

Read Previous

இளையராஜாவுக்கு வைரமுத்து புதிய யோசனை…

Read Next

கமல்ஹாசனுக்கு பத்ம பூஷன் விருது…