கமலுக்கு வாழ்த்து சொல்லாத முக்கிய நடிகர்கள்…

kamal haasan 2714ஒரு தமிழ் நடிகர், தமிழ் சினிமாவை உலக அரங்கில் பேச வைத்தவர், இந்திய அளவில் கொண்டாடப்படும் நடிகர் என பெயர் பெற்றவர் கமல்ஹாசன்.

கடந்த 25ம் தேதி சனிக்கிழமை அவருக்கு பத்ம பூஷன் விருது கொடுக்கப்படுவதாக முறையான அறிவிப்பு வெளியானது.

ஆனால், இதுவரை ரஜினிகாந்த், விஜயகாந்த், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், விஜய், அஜித் உள்ளிட்ட எந்த ஒரு நடிகரும் இதுவரை அவருக்கு வாழ்த்து சொல்லவில்லை.

இந்திய அளவில் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘பத்ம’ விருதுகளில் கமல்ஹாசன் ‘பத்மஸ்ரீ’ விருதுக்குப் பிறகு இந்த ‘பத்ம பூஷன்’ விருதைப் பெறும் ஒரே தமிழ் நடிகர் என்ற பெருமையப் பெறுகிறார்.

இருப்பினும் இதுவரை முக்கிய நடிகர்கள் யாரும் எந்த வாழ்த்தும் சொல்லாததன் காரணம் ஆச்சரியப்பட வைக்கிறது.

நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது , ரஜினி உங்களை வாழ்த்தினாரா என நிருபர்கள் கேட்டதற்கு பதிலளித்த கமல்,

“இன்னும் சொல்லவில்லை, நிச்சயமாக வாழ்த்துவார்,” என்றார்.

வாழ்த்துவதற்கும், பாராட்டுவதற்கும் தாமதப்படுத்தக் கூடாது என்பார்கள்…ஆனால், அது பலருக்குப் புரிவதில்லை…

Read Previous

தமிழ்நாட்டில் ‘வீரம்’தான் No.1

Read Next

பார்த்திபன் படத்தில் விஜய் சேதுபதி…