‘சைவம்‘ – நாசர் மகன் பாஷா அறிமுகம்…

Luthfudeen-Basha-Saivamவிஜய் இயக்கி வரும் ‘சைவம்’ படத்தில் நடிகர் நாசர் மகன் பாஷா நடிகராக அறிமுகமாகிறார்.

விஜய் இயக்கும் படங்களில் நாசர் கண்டிப்பாக ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பார்.

தான்  நாசரின் தீவிர ரசிகர் என்பதே அதற்குக் காரணம் என்கிறார் இயக்குனர் விஜய்.

‘சைவம்’ படத்திலும் நாசர் கதையின் முதுகெலும்பான ஒரு முக்கியமான முதியவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த முதியவரின் இளவயது பேரனாக நடிக்க பலரையும் பார்த்து திருப்திப்படாத விஜய், நாசரின் மகன் லுத்புதீனைப் பார்த்திருக்கிறார்.

அவர் நினைத்த பேரன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார என முடிவு செய்து, லுத்புதீனிடம் கேட்ட போது அவர் நடிக்க மறுத்து விட்டாராம்.

பின்னர், அவரின் பெற்றோர் சம்மதத்தோடு நடிக்க வைத்திருக்கிறார்.

இது பற்றி விஜய் மேலும் கூறியதாவது,

“அவரை  காமெராவில் பார்த்த போது  ‘ நாயகன் ‘  நாசரை நினைவு படுத்தினார் .அவரது தோற்றப் பொலிவு ஒரு புறம் இருக்க அவரது திறமையும் , கண்ணியமும் ,  என்னை மிகவும் கவர்ந்து உள்ளது . இதற்கான பெருமையில்  அவருடைய பெற்றோருக்கு பெரும் பங்கு உண்டு .  கண்ணியமான பெற்றோரின் வளர்ப்பு அவரது ஒவ்வொரு நடவடிக்கையிலும் புலப்படுகிறது’’, என்றார்.

திரைப்படத்திற்காக அவரது பெற்றோர் நாசர், கமீலா ஆகியோரின் சம்மதத்தோடு ‘பாஷா’ என பெயரிட்டிருக்கிறார்கள்.

வெல்கம் ‘பாஷா’….முதல் படத்திலேயே அப்பா பெயரை காப்பாத்திடுங்க…

Read Previous

பார்த்திபன் படத்தில் விஜய் சேதுபதி…

Read Next

சாதிப் பெயரை விடாதவரா வைரமுத்து…?

Most Popular