விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகர், ஐஸ்வர்யா, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் ‘ரம்மி’ திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் மூலம் பாலகிருஷ்ணன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் லிங்குசாமி இயக்கிய படங்களுக்கு தயாரிப்புப் பணிகளைப் பார்த்தவர்.
தொடர்ந்து வெற்றிப் படங்களாகக் கொடுத்து வரும் விஜய் சேதுபதியின் வெற்றி ஆட்டம், இந்த ‘ரம்மி’யிலும் தொடருமா என ஒரு எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தி உள்ளது.
இதற்குக் காரணம் இமான் இசையமைப்பில் “கூடை மேல கூடை வச்சி…., அடியே என்ன ராகம்…, உட்பட இந்த படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களுமே படத்தின் இசை வெளியானதும் ஹிட்டாகி விட்டன.
படத்தைப் பற்றி இயக்குனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “நான் எங்க ஊர்ல காலேஜ்ல படிக்கிறப்போ நடந்த சம்பவங்கள், அனுபவங்கள் இது எல்லாம் வச்சிதான் இந்த படத்தோட கதையை உருவாக்கியிருக்கேன்.
‘ரம்மி’யை ஆடி ஜெயிக்கணும், காதலை போராடி ஜெயிக்கணும். இரண்டுமே சுவாரசியமானது. சீட்டு ஆடும் போது அடுத்து என்ன நடக்குதுன்னே தெரியாது, அந்த சுவாரசியம் இந்த படத்துலயும் இருக்கு,” என்கிறார்.
அந்த விறுவிறுப்பான ஆட்டம் படத்துல இருந்தால் கண்டிப்பா வெற்றிதான்…