மீண்டும் இணையும் ‘வீரம்’ கூட்டணி…

veeram-location

‘வீரம்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான இயக்குனர் சிவா, அஜித் மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘வீரம்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வருவது தெரிந்ததே. அஜித்தின் திரைப்பட வரிசையில் இந்த படத்திற்கு தனிப்பட்ட இடம் உண்டு என அவரது ரசிகர்களே கூறி வருகின்றனர்.

எந்த ஹீரோவும் இந்த வயதில் செய்யாத விதத்தில் தொடர்ந்து மூன்று படங்களில் நரைத்த தலையுடன் தோன்றி தான் ஒரு வித்தியாசமான ஹீரோ என அஜித் மீண்டும் நிரூபித்து விட்டார்.

‘வீரம்’ வெற்றி அவரை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளதாம். அதனால் மீண்டும் சிவாவுடன் இணைந்து பணி புரிய விருப்பம் தெரிவித்துள்ளார்.

அஜித் அடுத்து கெளதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் அஜித் – சிவா இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

மீண்டும் ஒரு வீரமான வெற்றிக்குத் தயாராக இருங்கள் அஜித் ரசிகர்களே…

 

Read Previous

விஜய் சேதுபதியின் வெற்றி ‘ரம்மி’யில் தொடருமா ?

Read Next

விஜய் நடிக்கும் அடுத்தடுத்த படங்கள்…