விஜய் நடிக்கும் அடுத்தடுத்த படங்கள்…

jilla 0714_00003‘ஜில்லா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் தொடர்ந்து நடிக்கப் போகும் படங்களைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்ததாக  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

இந்த படத்தையடுத்து ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி, இரும்புக்கோட்டை முருட்டு சிங்கம்’ படங்களை இயக்கியவரும் தற்போது ‘ஒரு கன்னியும் மூணு காளைகளும்’ படத்தை இயக்கி வரும் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கப் போகிறாராம்.

இதற்கடுத்து ‘ராஜா ராணி’ வெற்றிப் படத்தை இயக்கிய அட்லீ இயக்கத்தில் நடிக்கவும் விஜய் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

இதனிடையே ‘பாண்டிய நாடு’ படத்தின் வெற்றி இயக்குனரான சுசீந்திரன் இயக்கத்திலும் நடிக்க ஆர்வமாக உள்ளாராம். விஜய்க்காக அவரும் ஒரு கதையை உருவாக்க ஆரம்பித்து விட்டாராம்.

இந்த படங்களை முடிக்கவே இந்த வருடம் ஓடி விடும்.

அதன் பின் 2015ம் ஆண்டில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படமும் தயாராகப் போகிறது.

ஆக, தொடர்ந்து விஜய் நடிக்கும் படங்களை அடுத்தடுத்து எதிர்பார்க்கலாம்.

Read Previous

மீண்டும் இணையும் ‘வீரம்’ கூட்டணி…

Read Next

தனுஷ் வில்லனாக கார்த்திக்…