பொங்கலுக்கு வெளிவந்த ‘வீரம், ஜில்லா’ படங்களில் ‘வீரம்’ திரைப்படம்தான் ‘க்ளியர் வின்னர்’ ஆக முந்திக் கொண்டுள்ளது.
இன்று ‘வீரம்’ திரைப்படம் 4வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. அதே சமயம் அதே நாளில் திரைக்கு வெளிவந்த ‘ஜில்லா’ திரைப்படம் நேற்றுடன் பல திரையரங்குகளிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ‘வீரம்’ திரைப்படம் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
‘ஜில்லா’ திரைப்படம் வசூல் ரீதியாக ‘வீரம்’ படத்திற்கடுத்து இடம் பெற்றிருந்தாலும் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
மோகன்லால் நடித்திருப்பதாலும், ‘துப்பாக்கி’ படத்தின் வெற்றிகரமான ஜோடியான விஜய், காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பதாலும் பல வினியோகஸ்தர்கள் பெரிய விலை கொடுத்து படத்தை வாங்கியிருக்கிறார்களாம். அவர்களுக்கு இதுவரை 60லிருந்து 70 சதவீதம் வரை மட்டுமே வசூல் கிடைத்துள்ளதாம்.
படத்தை ரசிகர்களிடத்தில் தொய்வில்லாமல் ஓடிச் செய்வதற்குத்தான் இத்தனை கோடி, அத்தனை கோடி என விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள்.
இப்படி எந்த ஆர்பாட்டமும் இல்லாமல், ரசிகர்களின் ‘மவுத் டாக்’ என்று சொல்லப்படும் வாய் வழிப் பேச்சால் மட்டுமே ‘வீரம்’ மிகப் பெரிய வெற்றியையும் வசூலையும் குவித்துள்ளதாக வினியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
