கமல் ஜோடியாக மீண்டும் சிம்ரன் ?

actress simran

மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘த்ரிஷ்யம்’.

இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கிறார்.

அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்பது பற்றித்தான் பல்வேறு விதமாக செய்திகள் வெளிவருகின்றன.

முதலில் மீனாவே தமிழிலும் நடிப்பார் என்றார்கள், பின்னர் நதியா நடிக்கலாம் என்றார்கள், இப்போது அந்த பட்டியலில் மேலும் ஒரு நடிகை சேர்ந்திருக்கிறார்.

அவர் சிம்ரன். கமலுடன் பம்மல் கே.சம்பந்தம், பஞ்ச தந்திரம் ஆகிய படங்களில் ஏற்கெனவே நடித்திருந்தார்.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘ஆஹா கல்யாணம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இப்போது கமல் ஜோடியாக ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் நடிக்க அவருடன் பேச்சு வார்த்தை நடப்பதாகத் தெரிகிறது.

யாருக்கு கமலுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைக்கப் போகிறதோ….?

Read Previous

தடுத்தவர்கள் பற்றி பேச வேண்டாம் – மௌனிகா

Read Next

ரஜினிகாந்தை இயக்க வேண்டும் – சேகர் கம்முலா