‘துப்பாக்கி’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் மீண்டும் இணைந்து பணியாற்றி வரும் புதிய படத்தின் கதை அந்த படத்தில் நடித்த பெங்காலி நடிகரான டோடா ராய் சௌத்ரி மூலம் வெளியாகியது என பரபரப்பு நிலவி வந்தது.
ஆனால், அப்படத்தின் இயக்குனராக ஏ.ஆர். முருகதாஸ் அதை மறுத்துள்ளார்.
“படத்தில் டோடா ஒரு சிறு கதாபாத்திரத்தில்தான் நடிக்கிறார். மெயின் வில்லனை இன்னும் தேர்வு செய்யவில்லை. சில நாட்கள் கொல்கத்தாவில் ஒரு சேசிங் சீனுக்காக மட்டுமே டோடாவை நடிக்க வைத்தோம்.
அவர் சொன்னதாக வந்த கதையைப் பற்றிக் கேள்விப்பட்டு நாங்கள் கவலைப்படவில்லை. ஏனென்றால், அது படத்தின் உண்மையான கதையே அல்ல. படத்தின் கதை மிகவும் மாறுபட்ட ஒன்று, ” என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
