பிரசாந்தின் ‘சாஹசம்’ ஆரம்பமானது…

prashanth 0303ஸ்டார் மூவீஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்க அருண்ராஜ் வர்மா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் பிரசாந்த் நாயகனாக நடிக்கும் படம் ‘சாஹசம்’.

இந்த படத்தில்  பிரசாந்தின் அப்பாவாக நாசர், அம்மாவாக துளசி, தங்கையாக லிமா நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமையா, தேவதர்ஷினி, எம்.எஸ். பாஸ்கர், ஜான் விஜய், ராவ் ரமேஷ், பிரம்மாஜி, கோட்டா சீனிவாசராவ், சுவாமிநாதன், ராஜேந்திரநாத், சாய் பிரசாந்த், மலேசியாவைச் சேர்ந்த அபீதா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

பிரசாந்த் ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமாகி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வாழ்க்கையில் மிகப் பெரிய ஆளாக வரவேண்டும் என்று நினைக்கிற ஒரு துடிப்பானை இளைஞனைப் பற்றிய கதை இப்படம்.

சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, சாஷி க்மெர் படத் தொகுப்பைக் கவனிக்க, மிலன் அரங்கத்தை நிர்மாணிக்கிறார்.

அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட பல நாடுகளில் நடைபெற உள்ளது.

Read Previous

காலையில படம் இருக்கு…மாலையில இல்ல…

Read Next

தனுஷ் அப்பாவை அழ வைத்த தயாரிப்பாளர்…